பழக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி
பழக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி
கோவை
கோவை சவுரிபாளையம் பிரிவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் பழக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் அருள்ராஜ் நேற்று முன்தினம் சுங்கம் அருகே நாயக்கர் தோட்டம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை, தர முடியாது என்று கூறினார். உடனே அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்த கத்தியை எடுத்து காண்பித்து அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். உடனே அருள்ராஜ் சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.
இதனால் பயந்த அந்த வாலிபர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அருள்ராஜ் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அருள்ராஜை கத்தியை காட்டி மிரட்டியது சுங்கம் சிவராம் நகரை சேர்ந்த முகேஷ் (19), மணிகண்டன் (19) மற்றும் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.