சேலத்தில், காந்தி நினைவு தினத்தில்கோட்சே உருவபொம்மையை தூக்கிலிட முயற்சிபோலீசார்-போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு


சேலத்தில், காந்தி நினைவு தினத்தில்கோட்சே உருவபொம்மையை தூக்கிலிட முயற்சிபோலீசார்-போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு
x

சேலத்தில் காந்தி நினைவு தினமான நேற்று, கோட்சே உருவபொம்மையை தூக்கிலிட முயன்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம்,

மகாத்மா காந்தி நினைவு நாள்

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலை முன்பு மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் சேதுமாதவன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சண்முகராஜன், மாநகர செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென்று காந்தியடிகளை சுட்டுக்கொன்ற, கோட்சே உருவபொம்மையை தூக்கிலிடுவதற்காக எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த போலீசார் கோட்சே உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் விடவில்லை.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் மிகவும் போராடி கோட்சே உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பறித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே உருவபொம்மையை தூக்கிலிட எடுத்து வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி விட்டனர்' என்றார்கள்.

சேலத்தில் கோட்சே உருவபொம்மையை தூக்கிலிட முயன்றதால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story