லாரி ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சி


லாரி ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சி
x

லாரி ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகன்கள் தேவ சகாயம், கிரப். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதில் கிரப் என்பவரது மகன் பிரித்திவி (வயது32) என்பவர் தனது நிலத்தில் கோழிக்கடை வைத்து நடத்தி வந்த தேவசகாயத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு தேவ சகாயம் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரித்திவி, தேவ சகாயத்தை அடித்ததால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவ சகாயத்தின் மகன் சிவரெங்கராஜன் தனது லாரியை வேகமாக ஓட்டி வந்து வீட்டு முன் நின்று கொண்டிருந்த பிரித்திவி மீது ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் பிரித்திவி லாரி வருவதை பார்த்ததும் கீழே தவறி விழுந்துள்ளார். அப்போது லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது. அப்போது சுவர் இடிந்து பிரித்திவியின் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இ்ந்த சம்பவத்தில் சிவரங்கராஜன், தேவ சகாயம் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story