டிரைவரை கொல்ல முயற்சி


டிரைவரை கொல்ல முயற்சி
x

டிரைவரை கொல்ல முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, சத்திரம் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் மகன் ஆனந்த்(வயது 38). இவர் சொந்தமாக கழிவு நீர் ஊர்தி வைத்து வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுநீரை அகற்றும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் அம்மாசத்தித்திலிருந்து தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் சென்று கொண்டிருந்தபோது அத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் சிலர் கழிவுநீர் அகற்றும் வாகனத்தை தடுத்து லிப்ட் கேட்டுள்ளனர். காலை நேரத்தில் யாரோ லிப்ட் கேட்கிறார்களே என்று ஆனந்த் வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பெரிய வாளை எடுத்து ஓங்கி டிரைவர் ஆனந்த் தலையில் வெட்ட வந்துள்ளனர். அதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஆனந்த் லாவகமாக தலையை நகர்த்திக் கொண்டார். இதில் அவரது விலா பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் அவருக்கு விலா பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு அதற்கு ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஆனந்த் கொடுத்த புகாரில் அவரை வெட்ட வந்தது கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் சரவணா நகரை சேர்ந்த சந்திரன் மகன் அசோக் (30) என்று குறிப்பிட்டுள்ளார். அசோக் ஆனந்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அசோக் மற்றும் அவருடன் 3 பேர் சேர்ந்து ஆனந்த் கழிவுநீர் ஊர்தியை ஓட்டி வரும் பாதையில் காத்திருந்து அவரை கொலை செய்ய முயன்றதாக அவரது புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கொலை செய்ய முயன்ற அசோக் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story