17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி


17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 24 May 2023 4:15 AM IST (Updated: 24 May 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, கிணத்துக் கடவு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே மாணவியின் தாய்க்கு, ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதல் ஆனது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் தாய், சிறுமி மற்றும் மகனை அவரது தாய் வீட்டில் தங்க வைத்தார். சிறுமியின் தாய் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

அந்த வீட்டிற்கு அடிக்கடி சுரேஷ் சென்று சிறுமியின் தாயுடன் தனிமையில் சந்தித்து வந்தனர்.

பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி அவரது தாயுடன் இருந்தார். தாய் வேலைக்கு சென்ற நேரத்தில் சிறுமியிடம் தாயின் கள்ளக்காதலன் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் சிறுமி அபாய குரலில் கூச்சலிட்டார். உடனே தாயின் கள்ளக்காதலன் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story