புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி


புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 27 Aug 2023 1:15 AM IST (Updated: 27 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்
கோவை, ஆக.27-

வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுப்பெண்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்கு சென்றதால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சமையல் வேலைகளை முடித்து விட்டு மதியம் அந்த பெண் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர், இளம்பெண்ணை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட் டார்.

பாலியல் பலாத்காரம்

அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், புதுப்பெண் ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தருமபுரியை சேர்ந்த ஆனந்த் (21) என்பதும், அவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

தொழிலாளி கைது

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். கோவையில் வீடு புகுந்து புதுப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story