இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி


இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 1 Sept 2023 4:00 AM IST (Updated: 1 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் புகார்

கோவை காந்திமாநகர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் திருமணமாகி எனது கணவருடன் வசித்து வருகிறேன். எனது கணவரின் நண்பரான மதுசுதன் (வயது 32) என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் நண்பர் என்பதால் நான் அவருடன் சகஜமாக பேசி வந்தேன்.

சம்பவத்தன்று எனது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த நான் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தேன். அப்போது எனது கணவரின் நண்பர் வீட்டுக்கு வந்தார். நான் அவரிடம் எனது கணவர் வேலைக்கு சென்று விட்டார் என்று கூறினேன்.

பலாத்காரம் செய்ய முயற்சி

நான் தனியாக இருப்பதை உறுதி செய்த அவர் திடீரென்று அத்துமீறி என்னை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனால் நான் சத்தம் போட்டேன். உடனே ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டினார்.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் உன்னையும், உனது கணவர் மற்றும் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

வாலிபர் மீது வழக்கு

இந்த புகாரின்பேரில் போலீசார் மதுசுதன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story