மூதாட்டியை கத்தியால் குத்தி பலாத்காரம் செய்ய முயற்சி
ஆலங்குடி அருகே மூதாட்டியை கத்தியால் குத்தி பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆலங்குடி:
பலாத்காரம் செய்ய முயற்சி
ஆலங்குடி அருகே எஸ்.களபம் ஊராட்சியை சேர்ந்த அடைக்கலம் மகன் முருகானந்தம் (வயது 20). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு 65 வயதுடைய மூதாட்டி வந்தார். இதையடுத்து அந்த மூதாட்டி முருகானந்தத்திடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்து கொண்டிருந்தார். கும்மங்களம் அருகே வந்தபோது அங்குள்ள குளக்கரையில் வைத்து மூதாட்டியை முருகானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மூதாட்டி சத்தம் போட்டார். இதையடுத்து முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூதாட்டி முகம், கைகளில் குத்தியுள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர்.
வாலிபர் சிறையில் அடைப்பு
இதைப்பார்த்த முருகானந்தம் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதைடுத்து பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் தப்பியோடி வாலிபரை ேதடி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த வாலிபரை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி கைது செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து போலீசார் முருகானந்தத்தை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.