சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 17 May 2023 4:30 AM IST (Updated: 17 May 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

9 வயது சிறுமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். சம்பவத்தன்று தொழிலாளி தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். இதனால் 9 வயது சிறுமியும், 4 வயது சிறுவனும் மட்டும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பயத்தில் சத்தம்பேட்டார். சிறுமியின் சத்தம்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக்கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

போக்சோவில் வாலிபர் கைது

கடைக்கு சென்று வந்த பெற்றோரிடம், நடந்தது குறித்து சிறுமி கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story