ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தீக்குளிக்க முயற்சி


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தீக்குளிக்க முயற்சி
x

ரோசணை போலீஸ் நிலையம் எதிரே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை. இவர் தனது மகள் உமாசங்கரிக்கு தானமாக கொடுத்த 1½ சென்ட் மனையை அதே பகுதியை சேர்ந்த காந்தி மகன்கள் பிரபு(வயது36), தன்ராஜ்(34), நாகப்பன்(40) ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். அதை காலி செய்யும்படி கூறிய தீர்த்தமலையை அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றனர். இதை தட்டிக்கேட்ட உமாசங்கரியையும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து உமாசங்கரி கொடுத்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நிலத்தை மீட்டுதரக்கோரி நேற்று தீர்த்தமலை, உமாசங்கரி, இவரது கணவர் சுகுமார் மற்றும் சிலர் ரோசணை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை ஏற்காத தீர்த்தமலை போலீஸ் நிலையம் எதிரே சென்று திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கு நின்ற போலீசார் ஓடி சென்று தீர்த்தமலையின் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து உமாசங்கரி, சுகுமார் ஆகியோருடன் சமாதானம் பேசி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற தீர்த்தமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் உமாசங்கரி கொடுத்த புகாரின் பேரில் தன்ராஜ், பிரபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story