ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர்
தூத்துக்குடி வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 42). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். சில காரணங்களுக்காக அவரால் சரியாக பணம் கட்டமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், பேச்சிமுத்துவிடம் இருந்து ஆட்டோவை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள அந்த தனியார் நிதிநிறுவனத்திற்கு பேச்சிமுத்து சென்று ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த பேச்சிமுத்து திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினரை அவர் மேல் தண்ணீர் ஊற்றி மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.