பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி


பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 July 2023 12:43 AM IST (Updated: 11 July 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

திருச்சி

திருச்சி தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவர் மீது தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இவருக்கு ஒரு வழக்கில் சம்மன் வழங்குவதற்காக நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர். விஜயகுமாரும் தில்லைநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரை பார்த்து திருடன் என கூறியதாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டு மனஉளைச்சல் அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆத்திரத்துடன் வெளியே சென்றார். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு மீண்டும் போலீஸ் நிலையம் வந்தார். போலீஸ் நிலையம் முன்பு அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெளியே ஓடி வந்து அவரை மீட்டு சமாதானப்படுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story