போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் சங்கிலி பறிக்க முயற்சி


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் சங்கிலி பறிக்க முயற்சி
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் சங்கிலி பறிக்க முயன்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அழகம்பாள்புரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் பறிக்கமுடியவில்லை. இதற்கிடையில் சாந்தி நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கீழேவிழுந்ததில் சாந்தி காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story