கருப்பு கிரானைட் கற்களை திருட முயற்சி


கருப்பு கிரானைட் கற்களை திருட முயற்சி
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

சங்கராபுரம் அருகே கருப்பு கிரானைட் கற்களை திருட முயற்சி 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே கடுவனூர்-ராவத்தநல்லூர் செல்லும் வயல்வெளி சாலையில் கருப்பு கிரானைட் கற்களை மர்ம நபர்கள் திருடிச்செல்வதாக விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி புவியியலாளர் அருள்முருகன் தலைமையிலான மண்டல பறக்கும்படையினர் வயல் வெளிச்சாலைக்கு விரைந்து சென்றனர். அப்போது 3 மர்ம நபர்கள் கருப்பு கிரானைட் கற்களை வெட்டி திருட முயன்றதை பார்த்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். ஆனால் பறக்கும் படையினரை கண்டதும் மர்ம நபர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிரானைட் கற்களை வெட்டி திருட முயன்ற கும்பல் அதே ஊரை சேர்ந்த செந்தில், ஏழுமலை, சரவணன் என்பது தெரியவந்தது. இது குறித்து உதவி புவியியலாளர் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் உள்பட 3 பேர் மீதும் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story