பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x

சோளிங்கரில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 55-க்கும் மேற்பட்ட பால் கொள்முதல் பணியாளர்கள் வேலைபார்க்கின்றனர். இவர்கள் தினசரி சோளிங்கர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 17 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த பால் கொடைக்கல் பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் குளிரூட்டப்பட்டு வேலூர் ஆவின் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் பால் கொள்முதல் பணியாளர்களிடம் வாரத்திற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் வேலை செய்ய முடியும் என்று மாமூல் கேட்டு மிரட்டுவதாகக்கூறி கொடைக்கல் பகுதியை சேர்ந்த பால் கொள்முதல் பணியாளர் நாகப்பன் திடீரென பால் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு, மாமூல் கேட்பதாக கூச்சலிட்டபடி தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story