கூலி தொழிலாளி மனைவி, மகளுடன் தீக்குளிக்க முயற்சி


கூலி தொழிலாளி மனைவி, மகளுடன் தீக்குளிக்க முயற்சி
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி மனைவி, மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி மனைவி, மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

போளூர் தாலுகா ஆத்துவாம்பாடி பகுதியை சேர்நதவர் ராஜநிலா (வயது 54), கூலி தொழிலாளி. இவர் இன்று தனது மனைவி பத்மா (47), மகள் வளர்மதி (28) மற்றும் சகோதரி ராணி (58) ஆகியோருடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக போர்டிகோவின் முன்பு திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த தலா அரை லிட்டர் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மற்றொரு தரப்பிற்கும், இவர்களுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது.

எதிர்தரப்பினர் ராஜநிலாவின் வீட்டை சேதப்படுத்தியதாகவும், அவர்கள் மீது சந்தவாசல் போலீசில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் எதிர்தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதற்காக அவர்கள் 4 பேரும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story