கடலூரில் முதியவரை கொலை செய்ய முயற்சி


கடலூரில் முதியவரை கொலை செய்ய முயற்சி
x

கடலூரில் முதியவரை கொலை செய்ய முயன்ற ஜாமீனில் வந்த 3 பேர் உள்பட 5 பேரை போலீசாா் கைது செய்தனா்.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). பிரபல ரவுடியான இவரது மகன் வீரா என்கிற வீராங்கன் கடந்த 16.2.2021 அன்று தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கிருஷ்ணன், போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி, கள்ளக்காதல் தகராறில் கடந்த 18.9.2021 அன்று கொலை செய்யப்பட்டார். இதில் வீரா கொலை வழக்கில் தொடர்புடைய குப்பன்குளத்தை சேர்ந்த ஜீவா என்கிற ஜீவானந்தம் (22), காந்திமதி கொலை வழக்கில் தொடர்புடைய மதன் என்கிற மதன்குமார் (19), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜீவா, மதன்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சுப்புராயலு நகரை சேர்ந்த நவீன்ராஜ் (20), புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து கூத்தப்பாக்கம் நாதன்நாயகி நகர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த வீராவின் தந்தை கனகராஜை வழிமறித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய கனகராஜ், போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா, மதன்குமார், நவீன்ராஜ் மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்தனர்.


Next Story