வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சி
போத்தனூரில் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்
போத்தனூரில் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொதுத்துறை வங்கி
கோவை- பொள்ளாச்சி ரோடு போத்தனூர் சிட்கோ பகுதியில் பொதுத்துறை வங்கி கிளை உள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் பலர் கணக்கு வைத்து உள்ளனர்.
இந்த வங்கியின் மேலாளராக இருப்பவர் ராஜ்குமார் (வயது 36). அந்த வங்கியில் கடந்த 28-ந் தேதி பணிகள் முடிந்ததும் மாலை யில் வங்கியை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். அன்றைய தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் வங்கி வளாகத்துக்குள் புகுந்தார்.
ஜன்னல் கம்பியை அறுத்தார்
பின்னர் அவர் வங்கியின் ஜன்னல் கம்பியை ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு ஆக்சா பிளேடால் அறுத்து எடுத்தார். ஆனால் அவரால் வங்கிக்குள் நுழைய முடிய வில்லை. இதற் கிடைேய அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார். இதையடுத்து மறுநாள் காலையில் வங்கிக்கு வந்த உதவி மேலாளர் வங்கியின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதை அறிந்த மேலாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வங்கியில் பொருத் தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிக ளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வங்கிக்குள் மர்ம நபர் செல்ல முடியாததால் நகை, பணம் தப்பியது. வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் தனியாக வந்தாரா? அவருடன் வேறு யாரும் வந்தார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங் களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வங்கியில் பதிவான கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். போத்தனூர் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.