பர்னிச்சர் கடையில் திருட முயற்சி

திண்டுக்கல்லில் உள்ள பர்னிச்சர் கடையில் மேற்கூரை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி செய்துள்ளார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் தனியார் பர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் கடை ஊழியர்கள் வழக்கம் போல் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதையும், பாதுகாப்பு பெட்டகம் திறந்த நிலையில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது நேற்று இரவு கடையின் மேற்கூரையை முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் உடைத்து உள்ளே புகுவதும், பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து பணம் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு எதுவும் கிடைக்காததால் அந்த நபர் திரும்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story