இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளரை கத்தியால் குத்த முயற்சி
இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளரை கத்தியால் குத்த முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக இருப்பவர் லட்சுமணன். இவர் தாழையூத்து பகுதியில் கொடுத்த கடனை வாங்க சென்றபோது இவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று 3 மர்மநபர்கள், லட்சுமணன் சிகிச்சை பெற்று வரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வார்டுக்கு சென்றனர். அப்போது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரை தாக்கி கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ஒரு கைதிக்கு பாதுகாப்புக்கு இருந்த 2 போலீசார் உடனடியாக தடுத்தனர். இதுகுறித்து லட்சுமணன், நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story