திருட சென்ற இடத்தில் தற்கொலை முயற்சி.. கதிகலங்கி போன வீட்டு உரிமையாளர்
வீட்டில் யாரோ இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது திருடன் இருப்பதை கண்டறிந்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேலு (42) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று பணிக்கு சென்று திரும்பிய போது வீட்டில் யாரோ இருப்பதை அறிந்து உள்ளே சென்று பார்த்த போது திருடன் இருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக அவனை உள்ளே தள்ளி கதவை தாழிட்டு ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பிடிபட்டதை அறிந்த திருடன் வீட்டிலிருந்த சேலையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றால் இதனை அடுத்து விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story