கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை முயற்சி


கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x

காவேரிப்பாக்கம் அருகே கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக படைப்பை பகுதியை சார்ந்த கோபி என்பவர் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (வயது 19). மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கஸ்தூரி விஷத்தை குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story