நகை திருட முயன்ற 2 பெண்கள்
நகை திருட முயன்ற 2 பெண்கள் சிக்கினர்.
சிவகங்கை
மானாமதுரை,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாலா என்பவர் தனது தங்கை மகள் பிறந்த நாள் விழாவுக்காக மானாமதுரைக்கு வந்தார். பின்னர் விழா முடிந்ததும் மீண்டும் நெல்லை செல்வதற்காக மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறினார். அப்போது அவரது பின்னால் நின்ற 2 பெண்கள் மாலாவின் பையில் வைத்திருந்த 1½ பவுன் நகையை திருட முயன்றனர். இதை அங்கிருந்த ஒருவர் பார்த்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்களை பிடித்து மானாமதுரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த வள்ளி, அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது ெசய்தனர்.
Related Tags :
Next Story