கலெக்டரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி


கலெக்டரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி
x

கலெக்டரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி நடந்துள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கலெக்டர் டிஆர்ஒய் என்ற பெயரில் கணக்கு தொடங்கி அதை நிர்வகித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கலெக்டர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அதன் மூலம் கலெக்டரின் நட்பு வட்டாரம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக வலைத்தள பக்கத்தில் உள்ளவர்கள் கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் பிரதீப் குமார் தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி நடப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கலெக்டரின் பெயரில் தொடங்கப்பட்டு இருந்த போலி கணக்கு முடக்கப்பட்டது. மேலும், போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இது போன்ற போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story