பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி


பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:46 PM GMT)

திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர்

கடலூர்

பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பத்தை சேர்ந்த ஞானசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும், உங்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழக்குப்பத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரு நாள் ஆடி திருவிழா நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும், அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் ஒரு நாள் ஆடி திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story