தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவேடு
நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை வெளிப்படையாக செயல்படுத்திடும் பொருட்டு புகைப்படத்துடன் கூடிய புவிசார் புகைப்படங்கள் செயலி மூலம் வருகை பதிவு பணித்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் தனிநபர் பணிகள் அல்லாத அனைத்து சமுதாய பணிகளும் செயலி மூலமாகவே வருகைப் பதிவேடு பதிவு செய்து அதன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பணித்தளங்களில் செயலி மூலம் காலை, மாலை 2 நேரங்கள் வருகை பதிவேடு எடுக்கப்படும். இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், பயனாளிகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story