கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துகள் 15-ந்தேதி பொது ஏலம்; மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துகள் 15-ந்தேதி பொது ஏலம்; மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
x

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துகள் வருகிற 15-ந்தேதி பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துகள் வருகிற 15-ந்தேதி பொது ஏலம் விடப்படுவதாக மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தெரிவித்து உள்ளார்.

பொது ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் தனியார் நிறுவனத்தின் இடை முடக்கம் செய்யப்பட்ட சொத்துகள், கோவை டான்பிட் சிறப்பு கோர்ட்டால் பொது ஏல விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அந்த நிறுவனத்தின் அசையா சொத்துகள் வருகிற 15-ந்தேதி பகல் 11 மணிக்கு, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமையில் பொது ஏலம் விடப்படுகிறது. இதற்கான ஏல நிபந்தனைகளுடன் கூடிய பொது ஏல அறிவிப்பு விவரத்தினை http://www.erode.tn.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில்பார்வையிட்டு, நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செய்யலாம்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், ரூ.25 ஆயிரத்தை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், 'Competent Authority and District Revenue Office, Erode' என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவாக (டி.டி.) பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் வருகிற 15-ந்தேதி காலை 10.30 மணிக்குள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு மற்றும் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் அறியலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தெரிவித்து உள்ளார்

Next Story