பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 12 ஆயிரத்து 877 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.85.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.99-க்கும், சராசரியாக ரூ.82.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 8 ஆயிரத்து 747 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.84-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.10-க்கும், சராசரியாக ரூ.79.20-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம் நடந்தது.

1 More update

Next Story