நாமகிரிப்பேட்டையில் 1,900 மூட்டை மஞ்சள் ரூ.78 லட்சத்துக்கு ஏலம்


நாமகிரிப்பேட்டையில் 1,900 மூட்டை மஞ்சள் ரூ.78 லட்சத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டையில் 1,900 மூட்டை மஞ்சள் ரூ.78 லட்சத்துக்கு ஏலம் போனது.

மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 1,900 மூட்டை மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

ரூ.78 லட்சத்துக்கு விற்பனை

இதில் விரலி ரகம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 196 முதல் ரூ.7 ஆயிரத்து 523 வரையும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 312 முதல் ரூ.6 ஆயிரத்து 302 வரையும், பணங்காலி ரகம் ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 127 முதல் ரூ.11 ஆயிரத்து 869 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.78 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடந்தது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவிலேயே மஞ்சள் மூட்டை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story