போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது
சிவகங்கை
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 2, இருசக்கர வாகனங்கள் 13 என மொத்தம் 15 வாகனங்களை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த பொதுவான ஏலம் வருகிற 15-ந் தேதி சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஏலத்தில் விடப்படும் வாகனங்களை வருகிற 14-ந் தேதி காலை 8 மணி முதல் பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.1,000 முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. சேர்த்து அன்றே செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story