ஆடி முதல் வெள்ளி விழா

கலவை கமலக்கண்ணி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி விழா நடைபெற்றது.
கலவை கமலக்கண்ணி அம்மன் கோவிலில் 45-ம் ஆண்டு ஆடி முதல் வெள்ளி விழா நடைபெற்றது. காலையில் ஸ்ரீஹரி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பக்தர்கள் சச்சிதானந்த சுவாமி தலைமையில் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 11 மணி அளவில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதியம் 1 மணி அளவில் மகாதேவமலை சித்தர் கல்பதேகி மகானந்த சுவாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாலை 4 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
மாலை 6 மணி அளவில் கமலக்கண்ணி அம்மனுக்கு, சமயபுரம் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூ பல்லுக்கு ஊர்வலம் நடந்தது. இதை ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், சென்னை பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, ஓய்வு பெற்ற கலெக்டர் ராஜேந்திரன், சென்னை நீதிபதி வணங்காமுடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழாவில் கோயம்புத்தூர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை தலைவர் குப்புசாமி, வாலாஜா தன்வந்திரி முரளிதர சுவாமிகள், ஓச்சேரி சிவகாளி மேகானந்த சுவாமி, எம்.எல்.ஏ.க்கள் வேலூர் கார்த்திகேயன், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார், வேலூர் அப்பு பால் பாலாஜி, திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் ஏ.வி.சாரதி, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு, கலவை புத்தூர் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், ஆற்காடு துர்கா பவன் ஓட்டல் உரிமையாளர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழாவில் காலை, மாலை, இரவு மூன்று வேளையிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஆற்காடு கண்ணன் சுவீட்ஸ் உரிமையாளர் பாஸ்கர் தலைமையில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. திருவிழாவை சச்சிதானந்த சுவாமி, அறங்காவலர் மற்றும் பன்னீர்தாங்கல் கிராமவாசிகள் நடத்தினர்.






