சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு


சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2023 4:45 AM IST (Updated: 18 May 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சாலை பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை பணிகளை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

தரப்பரிசோதனை

தமிழகம் முழுவதும் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் நெடுஞ்சாலைத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் நிறைவு செய்யப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கொண்டே குழு அமைத்து, தரப்பரிசோதனை செய்து, துறை ரீதியான உள் தணிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இதன்படி பொள்ளாச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் முடிக்கப்பட்ட 11.80 கி.மீ. நீளமுள்ள 4 வழிச்சாலை பணிகள் உள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் சேலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் கருமாபுரம் சிறுபாலத்தின் கட்டுமான தரம், சாலை ஓடுதளத்தின் தரம், வடிகால் கட்டுமான தரம், சாலை பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, கோட்டப்பொறியாளர்கள் சரவணசெல்வம், ரமேஷ், உதவிக்கோட்டப்பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story