சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு..!


சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு..!
x

கோப்புப்படம் 

சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

சென்னை,

சுபமுகூர்த்த தினமென கருதப்படும் இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story