உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோவிலுக்கு மங்கள பொருட்கள்


உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோவிலுக்கு மங்கள பொருட்கள்
x

உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோவிலுக்கு மங்கள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி

அம்மன் கோவில்களுக்கு இடையே மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளியம்மன் கோவிலுக்கு சமயபுரம் மாரியம்மன்கோவிலில் இருந்து மங்கள பொருட்கள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டு வேட்டி, பட்டு வஸ்திரம், வாழைப்பழம், மாம்பழம், மாலை, முந்திரி, திராட்சை, பிஸ்தா, 5 லிட்டர் தேன், சமயபுரம் மாரியம்மன் படம், மாரியம்மன் கோவிலில் தயாரிக்கப்பட்ட 10 கிலோ குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல், கோவில் குருக்கள் ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் நேற்று முன்தினம் விமானம் மூலம் மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து நேற்று உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோவில் அதிகாரிகளிடம் மங்களப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி அக்கோவிலின் நிர்வாகிகளிடம் வழங்கினார். மேலும் அங்குள்ள காளிக்கும் வஸ்திர மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உஜ்ஜயினி கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story