மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி


மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி
x

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் பெரம்பலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பெரம்பலூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாடபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, எசனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. பெரம்பலூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பயிற்சியை உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு பயிற்றுனர்கள் ரூபி, ஜெயா, இயன்முறை மருத்துவர் குமரேசன் ஆகியோர் பள்ளி மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு வழங்கினா். மேலும் பெற்றோர்களும் தினம் மையத்திற்கு வந்து பயிற்சி எடுத்ததால் தங்கள் குழந்தைகளுக்கு நடத்தை மற்றும் கல்வி செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பேசினர். வீடு சார்ந்த பயிற்சியில் பயன்பெறும் குழந்தைகளுக்கு தேவையின் அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சியில் மொத்தம் 35 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story