ஆட்டோ சங்க உரிமையாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை


ஆட்டோ சங்க உரிமையாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
x

ஆட்டோ சங்க உரிமையாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அனைத்து நகர ஆட்டோ சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. சார்பில் அறந்தாங்கி செக்போஸ்ட்டில் இருந்து ஆட்டோ சங்க உரிமையாளர்கள் ஆட்ேடாவில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர ஆட்டோ சங்க கவுரவ தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். எப்.சி.க்கு செல்லும் ஆட்டோவிற்கு புகை சான்று மற்றும் ஸ்டிக்கர்களுக்கு அணியாய கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தாதே மற்றும் தேர்தல் வாக்குறுதி படி புதிய ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்கிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்து வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story