கடலில் குதித்த ஆட்டோ டிரைவர் உயிருடன் மீட்பு
கடலில் குதித்த ஆட்டோ டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பால சுப்பிரமணியன் (வயது 40). இவர் ஆட்டோ மூலம் நேற்று பாம்பன்ரோடு பாலத்திற்கு வந்துள்ளார். அங்கு திடீரென ரோடு பாலத்தின் மையப்பகுதியின் தடுப்புச்சுவரில் நின்று கடலுக்குள் குதித்து உள்ளார். கடலில் உயிருக்கு போராடி தத்தளித்த இவரை அருகில் புதிய ரெயில் பணிகளுக்காக வேலை பார்த்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் கடலில் குதித்து உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரம் திரவியம் தெருவை சேர்ந்தவர் என்பதும் இவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவராக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சமூக ஆர்வலர் சிக்கந்தர் தலைமையிலான குழுவினர் இந்த நபரை ராமநாதபுரத்தில் உள்ள அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story