போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது


போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
x

போலீஸ்காரரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அரச வள்ளித்தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவர் குடிபோதையில் மற்றொரு ஆட்டோ டிரைவர் வேலாயுதம் (35) என்பவருடன் கிருஷ்ணராயபுரம் ரெயில் நிலையம் அருகே தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பாலவிடுதி போலீஸ்காரர் நவீன் குமார் (33) ஏன் தகராறு ஈடுபடுகிறீர்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் போலீஸ்காரர் நவீன்குமாரை தகாதவார்த்தையால் திட்டி தாக்கினர். இதில் காயம் அடைந்த நவீன்குமார் கோவகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story