இளம் பெண்ணின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவதூறு ஆட்டோ டிரைவர் கைது


இளம் பெண்ணின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவதூறு ஆட்டோ டிரைவர் கைது
x

உளுந்தூர்பேட்டை அருகே இளம் பெண்ணின் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவதூறு ஆட்டோ டிரைவர் கைது

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் பள்ளிப்பருவத்தில் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு வந்து செல்வார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ்(30) என்பவர் சிறுமியுடன் ஆசையாக பேசி ஆட்டோவில் செல்லும் போதெல்லாம் அவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். சிறுமியுடன் தனியாக இருக்கும்போது போட்டோ எடுத்து வைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் ராஜேசுக்கு திருமணமானது தெரிய வந்ததை அறிந்த இளம்பெண் அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டார். பின்னர் இவருக்கும் வேறு ஒரு இடத்தில் திருமணம் முடிந்த நிலையில் ராஜேஷ் பள்ளி பருவத்தில் சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை அவரது கணவருக்கும் மாமனாருக்கும் அனுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண்ணுக்கு தற்போது வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் இதையும் அறிந்து கொண்ட ராஜேஷ் மாப்பிள்ளை வீ்ட்டாருக்கு புகைப்படங்களை அனுப்பி அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story