கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய ஆட்டோ டிரைவர் சிக்கினார்
தர்மபுரி
தர்மபுரி செலகாரப்பன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2000 திருடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கோவில் பூசாரி சரவணன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தர்மபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்டு (வயது 19) என்ற ஆட்டோ டிரைவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story