வருசநாட்டில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
வருசநாட்டில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஆமினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முகமது யூசுப் கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்கான பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது யூசுப், வருசநாட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்குள்ள மயான பகுதிக்கு சென்ற அவர், விஷத்தை குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகமது யூசுப் உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.