ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
இரணியல் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் வளன்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் விஜயராஜ் (வயது 38). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் விஜயராஜ் கண்டன்விளை அருகே தெற்கு தோப்புவிளையில் உள்ள குடும்ப வீட்டுக்கு வந்தார்.
சம்பவத்தன்று அவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து விஜயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விஜயராஜூக்கு அதிக கடன் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்ததும் தெரியவந்தது.