லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
லாரி மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர்ராஜனின் மகன் சூர்யா (வயது 25). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கச்சிபெருமாள் கிராமத்தை கடந்து சென்றபோது எதிரே வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் ஆகியோர் சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இறந்த சூரியாவுக்கு ராஜலட்சுமி (24) என்ற மனைவி உள்ளார். அவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.