ஆட்டோ டிரைவர் படுகொலை


ஆட்டோ டிரைவர் படுகொலை
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் போலீசில் சரண் அடைந்தார்.

கோயம்புத்தூர்

கணபதி

கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய நண்பர் போலீசில் சரண் அடைந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆட்டோ டிரைவர்

கோவை ஆவாரம்பாளையம் சோபா நகரை சேர்ந்தவர் தாடிவீரன். இவருடைய மகன் சுப்பிரமணி (வயது28). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார்.

ஆவாரம்பாளையம் சோபா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் சாரங்கபாணி (31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

இவர்கள், கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் ஒரு பேக்கரி முன் உள்ள ஸ்டாண்டில் தங்களது வாகனங்களை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.

ரூ.20 ஆயிரம் கடன்

இந்நிலையில் சுப்பிரமணி ஆட்டோ வாங்குவதற்காக சாரங்கபாணியிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டு உள்ளார். எனவே அவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாரங்கபாணி ரூ.20 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை அவர், கடந்த சில வாரங்களாக திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால் சுப்பிரமணி, பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் சுப்பிரமணி மது அருந்திவிட்டு வாகன ஸ்டாண்டில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த சாரங்கபாணி தனக்கு வரவேண்டிய 20 ஆயிரம் பணத்தை சுப்பிரமணியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசில் சரண்

இதில் ஆத்திரம் அடைந்த சாரங்கபாணி தனது வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியின் தலையில் பலமாக தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைதொடர்ந்து சாரங்கபாணி காந்திபுரத்தில் உள்ள காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று, கடன் கொடுத்த பணத்தை திரும்பி தராத சுப்பிரமணியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இது குறித்து காட்டூர் போலீசார் தெரிவித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று, சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story