ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை


ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை
x

ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சி

ஆட்டோ டிரைவர்

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு காந்திமார்க்கெட் பால்பண்ணை அருகே உள்ள மதுபான கடைக்கு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார்.

அப்போது அந்த மதுபான கடை மூடப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் அங்கு மற்றொரு தரப்பினர் மது குடிக்க வந்தனர். அப்போது செல்வத்துக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த அந்த தரப்பை சேர்ந்த ஒரு வாலிபர், கத்தியை எடுத்து செல்வத்தின் காது அருகே குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து சரிந்து கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து படுகாயத்துடன் கிடந்த செல்வத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார்.

வாலிபர் கைது

இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த சம்பவம் நடந்த மதுபான கடைக்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நள்ளிரவில் நடந்த மோதல் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து செல்வத்தை கத்தியால் குத்திக்கொலை செய்தது காஜாபேட்டையை சேர்ந்த விஜய்பாபு(23) என்பது தெரியவந்தது. இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய்பாபுவை கைது செய்தனர்.


Next Story