ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கோபிநாத், வாட்ஸ்அப் மீட்டர் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சுரேஷ், வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கும் வரை வாட்ஸ்அப் மீட்டர் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதத்தொகை வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலவாரியம் மற்றும் அரசு உதவி நலத்திட்டங்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசின் தொகுப்பு வீடுகளில் வீடுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

1 More update

Next Story