ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆட்டோ தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்து தர வேண்டும். ஆட்டோ தொழிலை பாதுகாக்க கேரளாவை போன்று தமிழகத்திலும் தனியாக செயலி உருவாக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் சந்தானம், முகமதுமைதீன், பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story