ராமநத்தம், திட்டக்குடியில்ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ராமநத்தம், திட்டக்குடியில்ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம், திட்டக்குடியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


ராமநத்தம்,

ராமநத்தம் பஸ் நிலையத்தில் ஜீவா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். பெரியசாமி, வேல்முருகன், தர்மதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டமானது, ஆட்டோ தொழிலை சீர்குலைக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும், காவல்துறை மற்றும் வட்டாரபோக்குவரத்து துறை மூலம் போடப்படும் ஆன்லைன் அபராத நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதில், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டதுணை தலைவர் முருகையன், இந்திய கம்யூனிஸ்டு மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதிஉலகநாதன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிவப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய குழு ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி

இதேபோன்று திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஜீவா ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நாராயணன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், வி.பி.முருகையன், நிதி உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் மணிகண்டன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story