ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை


ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ெரயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மந்திரமூர்த்தி, செல்வகுமார், செல்வன், கணேசன், கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தார்கள்.

அதில், "மினிபஸ்கள் ெரயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இரண்டு மணி முதல் இயக்கப்படுகிறது. இதனால் ெரயில் நிலையம் முன்பு ஆட்டோ இயக்கும் டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆட்டோவில் பயணிகளை ஏற்றும்போது, மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பயணிகளை அழைப்பதால், மோதல் ஏற்படும் சூழ்நிலைகளும், சட்ட- ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. மினி பஸ்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.

ெரயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இயக்கப்படும் மினிபர்ஸ்கள் அனுமதி பெற்று இயக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து, அனுமதி இல்லாமல் இயக்கப்படும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story