ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது. ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவித்தது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் இலவச வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நலவாரிய நிதியில் இருந்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், செல்வன் என்ற சற்குணம், அண்ணாத்துரை, கந்தையா, மேலப்பாளையம் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க நகர செயலாளர் சாகுல் ஹமீது பாதுஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story